‘விசா நடைமுறைகள் எளிமையாக்கப்படும்’

வாரணாசி: வெளிநாடு இந்தியர்களுக்கான ‘விசா’ நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் செவ்வாய்க் கிழமை தொடங்கிய ‘பர்வாசி பாரதிய திவாஸ்’ எனும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மொரி‌ஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய திரு மோடி, “வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களை இந்தியாவின் எண்ணங் களை வெளிப்படுத்தும் தூதர்கள்,” என்றார்.
“இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் பல்வேறு நாடுகளில் தலை மைப் பதவிகளில் உள்ளனர். குறிப்பாக மொரி‌ஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து ஆகிய நாடுகளில் முக்கியப் பதவிகளை இந்தியர்கள் வகிக்கின்றனர்,”  என்று அவர் குறிப்பிட்டார்.
“வெளிநாடு இந்தியர்களுக்கு விரைவில் ‘இ-பாஸ்போர்ட்’ வழங் கப்படும். இதற்காக உலக முழு வதும் உள்ள தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் பாஸ்போர்ட் சேவா திட்டத்துடன் இணைக்கப் பட்டு அனைவரும் கடவுச்சீட்டு சேவைகள் விரைவாக பெற வழி வகை செய்யப்படும்,” என்று மேலும் பேசிய பிரதமர் மோடி தெரி வித்தார்.
இதே மாநாட்டில் காங்கிரஸ் கட்சியையும் அவர் சாடினார்.
“காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களுக்கு அரசு செலவு செய்யும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டும் சென்று சேர்கிறது. மற்றவற்றை இடையில் இருப்பவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று அந்தக் கட்சியின் முக்கியமான ஒருவரே தெரிவித்திருந்தார்.