ராகுல்: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில்  நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியும் இன்றி தனித்தே போட்டியிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். அந்த மாநிலத்தின் முக்கிய இரண்டு கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகியவை தங்களது கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்கப்போவதில்லை என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் திரு ராகுல் கூறினார். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இணைந்திருப்பதால் அவர்களது கூட்டணி தொடர்பில் தனக்கு எந்த மனவருத்தமும்  இல்லை என்று திரு ராகுல் தெரிவித்தார்.

இந்த முடிவால் கட்சியின் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்து இருப்பதாக மாநில பொதுச்செயலாளர் வினோத் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.