இடிந்து விழுந்த கட்டடம்; சிதைவுகளில் சிக்கிய ஐவர்

புதுடெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் நகரில் நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐந்து பேர் கட்டடச் சிதைவுகளுக்கு இடையே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

காயங்கள் அல்லது மரணங்களைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இந்தியாவின் தேசிய பேரிடர் நிர்வாகப் படையின் மூன்று குழுக்கள் விபத்து நடைபெறும் இடத்திற்கு விரைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சம்பவத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாண்டின் தொடக்கத்தில் மேற்கு டெல்லியிலுள்ள மோடி நகரில் மின்விசிறி தொழிற்சாலைக் கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டதில் குழந்தை உட்பட ஆறு பேர் மாண்டனர்.

Loading...
Load next