ஸ்மிருதி இரானி: எதிர்க்கட்சியினர் பயப்படுகின்றனர்

ஸ்மிருதி இரானி: எதிர்க்கட்சியினர் பயப்படுகின்றனர்

1 mins read
f52ee2c8-71f8-4695-8107-859e942fea4b
-

வழக்கமாக எதிராளிகளாகவே இருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது தங்கள் சுயநலத்தாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீதான பயத்தாலும் இணைந்து செயல்படுவதாக இந்தியாவின் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

"கொள்கை அளவில் எந்த ஒற்றுமையும் இல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்றாகத் திரண்டு பிரசாரத்தில் ஈடுபடும் விந்தையை மேற்கு வங்காளத்தில் அண்மையில் நாங்கள் கண்டோம்," என்றார் ஸ்மிருதி இரானி.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளதாக அந்தக் கட்சியே நினைப்பதை அவரது தங்கை பிரியங்காவின் அண்மை நியமனம் காட்டுவதாக ஸ்மிருதி சாடினார். கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக பிரியங்கா நேற்று நியமிக்கப்பட்டார்.