‘பிரியங்கா வருகையால் அச்சத்தில் பாஜக’

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தன் சகோ­தரி பிரியங்கா காந்தியை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். 
இதன் தொடர்பில் புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ராஜா திரையரங்கம் சந்திப்பில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. 
பின்னர் முதலமைச்சர் நாராய ணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “பிரியங்கா காந்தி தீவிர மாக அரசியலுக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பல ஆண்டுகளாக விரும்பினர். நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் பிரியங்கா காந்திக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது.
“2019ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூ கங்களை வகுத்து வருகிறது. பிரியங்கா காந்தியின் அரசியல் நுழைவும் அதில் ஒரு வியூகம். இந்திய அரசியலில் இந்திரா காந்தி முத்திரை பதித்தார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் நாட்டுக்காக உழைத்தனர். நாட்டின் நலன், பாதுகாப்பு, ஒற்று மைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது உயிரைத் தியாகம் செய்தனர்.
“ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் கட்சியை வழிநடத்துவது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலம். 2019ல் காங்கிரஸ் கட்சி வலுவான இயக்கமாக மாறும். பிரியங்காவின் அரசியல் நுழை வால் பாஜகவுக்குக் காய்ச்சல், பயம் வந்துவிட்டது. பாஜகவினர் இப்போது உளர தொடங்கி யுள்ளனர்,” என்றார்.
இந்நிலையில் முதல்வர் நாரா யணசாமிக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை, “பிரியங்கா வரவால் பாஜக பயப்படுகிறது” என்பது ஒரு நகைச்சுவை’ என்று பேசியுள்ளார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்