கர்நாடகம்: எம்எல்ஏக்கள் மோதல் விவகாரத்தில் எம்எல்ஏ கணேஷ் இடைநீக்கம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கள் மோதிக்கொண்ட பிரச்சினை யில் படுகாயமடைந்த எம்எல்ஏ ஆனந்த் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எம்எல்ஏ கணேஷ் தன்னைக் கொல்ல முயற்சி செய்ததாக எம்எல்ஏ ஆனந்த் சிங் போலிசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் தலைமை அவரைத் தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.
கர்நாடகத்தில் காங்கி­ரஸ் - ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஏழு சட்டமன்ற உறுப் பினர்களை பாரதிய ஜனதா கட்சி யினர் தங்கள் பக்கம் இழுப்பதற் கான முயற்சிகள் நடப்பதாக தக வல்கள் வெளியா­கின. அதனை யடுத்து பாஜகவின் வலையில் இந்த ஏழு காங்கிரஸ் எம்எல்ஏக் களும் சிக்காமல் இருப்பதற்காக அவர்கள் ராம்நகர் மாவட்டம், பிடதியில் உள்ள ஈகிள்டன் உல் லாச விடுதியில் யார் கண்ணிலும் படாமல் தங்க வைக்கப்பட்டிருந் தனர். 
கடந்த 19ஆம் தேதி இரவு அந்த உல்லாச மாளிகையில் பெல் லாரி தொகுதி சட்டமன்ற உறுப் பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வேளையில் கம்பளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், விஜயநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிங்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இதில் காயமடைந்த ஆனந்த் சிங் பெங்களூரு சேஷாத்திரி புரத் தில் உள்ள அப்போலோ மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
“கணேஷ் என்னை தொடர்ச்சி யாக அடித்துக் கீழே தள்ளினார். நான் கீழே விழுந்தும்கூட என்னை அவர் விட்டபாடில்லை. என் தலையைப் பிடித்து இழுத்து சுவரில் மோதியதோடு காலால் மிதித்து உதைத்து தள்ளினார்,” என்று கூறினார் அடிவாங்கிய எம்எல்ஏ ஆனந்த் சிங்.
இதற்கிடையே, எம்எல்ஏ கணேஷ், நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
“பெல்லாரி தொகுதி எம்எல்ஏ பீமா நாயக்குக்கும் ஆனந்த் சிங்குக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது. அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் என்னை மீறி இந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது.