தென்துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ்

புதுடெல்லி: இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ஐடிபிபி) பணிபுரியும் அபர்ணா குமார், அண்டார்டிகாவில் உள்ள தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலப் பிரிவில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர் அபர்ணா குமார் (44). இந்தோ திபெத் எல்லை காவல் படையில் டிஐஜியாக பணிபுரிந்து வரும் இவர், எட்டு நாள் பயணத்துக்குப் பிறகு கடந்த 13ம் தேதி அண்டார்டிகா கண்டத்திலுள்ள தென்துருவத்தை அடைந்தார். இதன்மூலம் இந்தச் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்துள்ளார். இவருடன் எழுவர் கொண்ட குழு சென்றது. 111 மைல் தூரம் இவர்கள் நடந்துள்ளனர்.