குடியரசு தின விழாவில் தொடர் தாக்குதல் திட்டம்: இரு தீவிரவாதிகள் கைது

இந்தியா அதன் குடியரசு தினத்தை இன்று விரிவான அளவில் கொண் டாடுகிறது. இதனையொட்டி பல் வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் கொண் டாட்டங்களைச் சீர்குலைத்து தாக் குதல் நடத்தத் திட்டமிட்ட சந் தேகத்தின் பேரில் இரு ஆடவர்களை டெல்லி நகர சிறப்புப் போலிசார் கைது செய்துள்ளனர். அவ்விருவரும் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் கனி, ஹிலால் என முதற்கட்ட விசா ரணையில் தெரிய வந்துள்ளது. குடியரசு தினக் கொண்டாட் டங்கள் அரங்கேறும்போது டெல் லியின் எரிவாயுக் குழாய் கட்ட மைப்பிலும் லஜ்பத் நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங் களிலும் தொடர் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளதாக போலிசார் கூறினர்.

லஜ்பத் நகரிலும் கிழக்கு டெல்லியிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த இரு ஆடவர்களும் போலிஸ் வசம் சிக்கியதன் மூலம் பெரும் நாசவேலை தவிர்க்கப்பட்டுள்ள தாக ஊடகங்கள் குறிப்பிட்டன. மேலும், தாக்குதலுக்குப் பயன் படுத்தும் நோக்கத்தோடு காஷ்மீர் நகரில் அவர்கள் பதுக்கி வைத் திருந்த வெடிகுண்டுகளையும் ஆயுதங்களையும் போலிசார் கைப் பற்றியுள்ளனர். கைதானவர்களில் ஒருவன் டெல்லியில் அண்மையில் நிகழ்ந்த கையெறி குண்டு தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவன் என் றும் போலிசார் தெரிவித்தனர்.

Loading...
Load next