பிரியங்கா வருகையால் காங்கிரசுக்கு தெம்பு

பிரியங்கா காந்திக்கு காங் கிரஸ் கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்ட பின்னர் அக் கட்சியின் கூட்டணி உத்தி மாறி வருகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலை பெரும்பாலான மாநிலங்களில் தனித்தே போட்டியிட்டுச் சந் திக்க அக்கட்சி தயாராகி வரு கிறது. உத்தரப் பிரதேசத்திலும் ஆந்திர மாநிலத்திலும் காங் கிரஸ் தனித்து களம் காணும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து விட் டார். இதர மாநிலங்களிலும் இதேபோன்றதொரு பாணியை அக்கட்சி பின்பற்றக்கூடும் என தெரிகிறது. அண்மைய சட்டமன்றத் தேர்தல்களில் பெற்ற வெற்றியும் பிரியங்கா வருகையும் காங்கிரசுக்குப் புது தெம்பைக் கொடுத்திருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

பிரியங்கா வருகையின் பிரதிபலிப்பாக தமிழக காங்கிர சில் முன்னாள் நீதிபதி உள் ளிட்ட 18 பிரமுகர்கள் திடீரென இணைந்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்கே பாலகிருஷ்ணன், முன்னாள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப் பினர் டாக்டர் நல்லமுத்து, ஓய்வுபெற்ற வருமான வரித் துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற பாரத் மிகுமின் நிறுவன அதிகாரிகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திக் குழு துணை மேலாளர் தினேஷ்குமார், இந் திய ஓவர்சீஸ் வங்கி தொழிற் சங்கத் தலைவர் எம்,ராமசாமி உள்ளிட்டோர் காங்கிரசில் ஐக் கியமாகி உள்ளனர். மாற்றுக் கட்சிகளிலிருந்து பலரும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவ முயன்று வருவதாக இணையச் செய்திகள் தெரி விக்கின்றன.

பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும். கோப்புப் படம்