குடியரசு தினத்தில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: நாடு முழுவதும் 70வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சோன்மாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றிவளைத்தனர். உடனடியாக பயங்கரவாதிகள் துப் பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக் குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் மூன்ற வீரர்கள் காயம் அடைந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி களின் பெயர், அவர்களின் இயக்கம் போன்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் இரு பயங் கரவாதிகள் அங்கு பதுங்கி உள்ளதால் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் தெடர்ந்து பதட்டம் நீடிப்பதால் என் கவுன்டர் நடைபெற்ற இடத்தில் மத்திய ஆயுதப் படையினரும் ஸ்ரீநகர் போலிஸ் படையினரும் குவிக்கப்பட்ட னர்.

Loading...
Load next