ஆளில்லா திடலில் ஆளுநர் உரை

அய்சால்: குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் தலைநகரில் நேற்று நடந்த 70வது குடியரசு தின விழா வை ஒட்டுமொத்த மக்களும் புறக் கணித்தனர். இதனால் ஏறக்குறைய மக்கள் இல்லாத, வெற்றுத்திடலில் ஆளு நர் கும்மணம் ராஜசேகர் குடியரசு தின உரை நிகழ்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிகாரிகள், அமைச்சர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பொதுமக்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை. மிசோரம் மாநி லத்தில் உள்ள பிற மாவட்டங்களில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சிகளையும் மக்களும் அதி காரிகள் சிலரும் புறக்கணித்தனர்.