பெண்ணின் கூந்தலை வெட்டிய  எழுவர் கைது

காந்திநகர்: குஜராத் மாநிலம், ஞானி காராஜ் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான நிலையில், தனக்குப் பிடித்த வேறொரு நபருடன் அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டார். 
இதனை அறிந்த அவரது உறவினர்கள், அந்தப் பெண்ணை மீட்டு கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
ஆத்திரம் அடைந்த உறவினர்களும் பொதுமக்களும் பெண்ணை சரமாரியாகத் தாக்கியதோடு, அவரது கூந்தலையும் வெட்டினர். இந்தக் காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து எழுவர் கைதாகினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்