கடும் பனிப்பொழிவு; ரயில்கள் தாமதம்

கடும் பனிப்பொழிவு; ரயில்கள் தாமதம்

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் கடும் பனிப்பொழிவின் காரணமாக 13 ரயில்கள் காலதாமதத்துடன் வந்து சேர்ந்தன. டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகளில் பனிமூட்டத்தால் தொலைதூரத்தில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்குச் செல்லும் மக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.