மின்சாரம் தாக்கி மூவர் பலி

பாட்னா: பீகார் மாநிலம், கோபால்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் குடியரசு தின விழாவின்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். நால்வர் படுகாயம் அடைந்தனர். 
இதேபோல் பைகுந்த்பூரில் உள்ள அரசு அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அருகில் உள்ள உயர் அழுத்த மின்கம்பியில் கொடிக் கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். நால்வர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.