12 விவசாயிகள், 14 மருத்துவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: 70வது குடியரசு தினத்தை ஒட்டி 12 விவசாயி கள், 14 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 112 பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில் 94 பேருக்குப் பத்ம ஸ்ரீ, 14 பேருக்குப் பத்ம பூஷண், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 விவசாயிகள், 11 மாநிலங் களைச் சேர்ந்த 14 மருத்துவர்கள், விளையாட்டுத் துறை யினர் ஒன்பது பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.