தேசியக் கொடி கீழே விழுந்ததால் விசாரணைக்கு உத்தரவு

ஸ்ரீநகர்: எந்த ஒரு நாட்டிலும் தேசியக் கொடியைத் தீயிட்டுக் கொளுத்துவதும் அதைக் கிழித்து வீசுவதும் பெரும் குற்ற மாகக் கருதப்படும். 
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரியில் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் முகமது ஆஸாத் ஏற்றிய தேசியக் கொடி கீழே விழுந்ததால் இருவர்  கொண்ட குழு விசாரணை நடத்தி, அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.