கோயில் பிரசாதம் சாப்பிட்ட இருவர் பலி; எண்மருக்கு சிகிச்சை

சிந்தாமணி: கோயிலில் கொடுக் கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்டு கடந்த மாதம் சாமராஜநகர் மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில் இப்போது இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 
கர்நாடகாவின் சிக்கபல்லபுரா மாவட்டம், சிந்தாமணி நகரில் உள்ள கங்கா பவானி தேவி ஆலயத்தில்  கொடுக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட இரு பெண்கள் உயிரிழந்தனர். எட்டு பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
சிதலராக்கத்தா பகுதியைச் சேர்ந்த கவிதா, 28, சரஸ்வதம்மா, 56 ஆகியோர் உயிரிழந்தனர்.  
“ஆலயத்தில் பிரசாதம் விநி யோகிப்பதற்கு என்று ஒரு குறிப் பிட்ட விதிமுறைகள் இருப்பது முக்கியம். இதுகுறித்து அதிகாரி களுடன் ஆலோசித்து நல்ல முடி வெடுக்கப்படும். சிக்கபல்லபுரா சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகிகளிடமும் போலிசாரிடமும் அறிக்கை கேட் கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையிலான நடவடிக் கைகளை விரைவில் அரசு எடுக் கும்,” என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி உறுதி தெரிவித் துள்ளார்.      
“இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகம் ஈடுபடவில்லை. அவர் கள் பிரசாதமும் தயாரிக்க வில்லை.  இந்தக் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோயிலின் வெளியே பிரசாதம் விநி யோகித்த மூவர் கைதாகி உள்ளனர்,” என்று காவல்துறை யினர் கூறியுள்ளனர். 
கங்கம்மா தேவி கோயிலில் பிரசாதம் உட்கொண்டு உயிரி ழந்த கவிதாவின்  குடும்பத்தினர் நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கோயிலில் அடையாளம் தெரி யாத இரு பெண்கள், பக்தர் களுக்கு கேசரி பாத் வழங்கி யுள்ளனர். இதனை உட்கொண்ட பக்தர்களுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. 
உடனே அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

Loading...
Load next