2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முக்கிய இடம் பிடிக்கிறது; பாஜக தீவிரம்

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு மிக முக்கிய மாநிலமாக ஆகி வருகிறது. வட இந்தியாவில் பாஜகவிற்கு 2014 தேர்தல் அளவுக்குப் பெரும் வெற்றி கிடைக்காது என்பது பல ஆய்வுகள், கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்து இருக்கிறது. 
பாஜகவுக்கு வடஇந்தியாவில் ஏற்படக்கூடிய பின்னடைவைச் சரிக்கட்ட அந்தக் கட்சி தென் இந்தியாவில் மொத்தம் 50 இடங் களைக் கைப்பற்றிவிடவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாகக் கண்வைக்கத் தொடங்கிவிட்டது என்று கவனிப் பாளர்கள் கூறுகிறார்கள். 
தமிழ்நாடு 39 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டு இருக் கிறது. இந்தியாவின் அடுத்த மத்திய அரசுக்கு அந்த மாநிலம் மிக முக்கியமானதாக ஆகி வரு கிறது என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மிகவும் வலு வான எதிர்க்கட்சியான திமுக வுடன் ஏற்கெனவே கூட்டு சேர்ந்து விட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தனித்து நிற்கும் பாஜக, வெகுவிரைவில் அதிமுகவுடன் கூட்டுச் சேரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளன. 
அதிமுகவுடன் சேர்ந்தால்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வெற்றி கிட்டும் என்று கவனிப்பாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். 
இந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் 19ஆம் தேதி கன்னியாகுமரி வரவிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். 
மாநிலத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து பெரும் வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் குறைந்தபட்சம் பத்து இடங்களையாவது கைப்பற்றிவிடவேண்டும் என்பது பாஜகவின் இலக்காக இருப்பதாகத் தெரியவருகிறது. 
இதனிடையே, அடுத்த ஆண்டு தேர்தல் பற்றி கருத்துத் தெரிவித்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வரும் தேர்தலில் எந்தவொரு தேசிய கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று கணித்துக் கூறினார். 
 

Loading...
Load next