தமிழகத்தில் தொழில் தொடங்க  முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு வெளி நாடு, வெளிமாநிலத் தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு தொழில்தொடங்க முன்வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யத் தயாராகவுள்ளது என்று முதல்வர் உறுதியளித்துள் ளார்.
தொழில்துறையை மேம்படுத்த பல்வேறு தொழில் கொள்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ‘தொலைநோக்குத் திட்டம் 2023’ என்னும் திட்டம் பற்றியும் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்கும் புத்தாக்கக் கொள்கையையும் அரசு வெளியிட்டது.
இத்திட்டங்களின் மூலம் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம் ஐயாயிரம் புதிய தொழில்கள்  உருவாக்கப்படும். அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 
திருப்பெரும்புதூரில் செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.1,200 கோடி முதலீட்டில் கண்ணாடித் தொழிற்சாலைகளை விரிவாக்கி யுள்ளது. அந்த புதிய விரிவாக்க தொழில் வளாகங்களைத்  தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி இதனை அறி வித்தார்.
“தமிழகத்தில் பெரிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவ தற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. 
“மேலும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்துதரப்படும். இவ்வகையில் தமிழக அரசு வெளிப்படையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.  
“நாட்டின் பொருளியலை மேம்படுத்தவும் தொழில் துறையில் தமிழகத்தை மேம்படச் செய்யவும் நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்,” என்றார் முதல்வர்.
 

Loading...
Load next