225 ஆசிரியர்களை இடை நீக்கம் செய்தது கல்வித்துறை

சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் நடை முறைப்படுத்தப்பட்ட பிறகு நிலு வையில் உள்ள 21 மாதச் சம்பளப் பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த ஒருவார கால மாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பவேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை கெடு விதித்திருந் தது. 
அவ்வாறு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும், அதற்குப் பின்னரும் பணிக்குத் திரும்பாத ஆசிரியர் களின் பணியிடங்கள் காலியான தாக அறிவிக்கப்பட்டுத் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப் படுவர் எனவும் தெரிவிக்கப்பட் டது.
இந்நிலையில், நேற்று 90%க்கும் மேலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாக பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்தது. 
எனினும், சில ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். 
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளிகளுக்கு வராத தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 225 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.