முன்னாள் தேர்தல் ஆணையர் பெயரில் போலி வாக்காளர் அட்டை

ஐதராபாத்: தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி. ரவாத் ஆகியோர் பெயரில் போலி வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள் ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட தலைவர்கள் பெயரில் போலி வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்ட விவகாரம் தங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்த ஐதராபாத் மாநகராட்சியினர் இது குறித்து காவல்துறை யிடம் புகார் அளிக்கப் பட்டதாகக் கூறினர்.
நம்பள்ளி தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலி ஆதார் அட்டை, வீட்டு முகவரிக்கான ஆவணம் போன்றவற்றைச் சமர்ப்பித்து மோசடிக்காரர்கள் முக்கிய அதிகாரிகளின் வாக்காளர் அட்டையைப் பெற்றுள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்