சித்தராமையா: கேள்வி கேட்ட பெண் தொண்டரை 15 ஆண்டுகளாக தெரியும்

பெங்களூரு: கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்தகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் விளக்கம் அளித் துள்ளார்.
“சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை 15 ஆண்டுகளாகத் தெரியும். அப்பெண் சகோதரி போன்றவர். அவர் நீண்டநேரம் பேசியதால் கோபம் ஏற்பட்டது,” என்று சித்த ராமையா கூறியுள்ளார்.
மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண் தொண்டர் ஒருவர் சித்தராமையாவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆவேசமடைந்த சித்தராமையா, அமைதியாக கீழே உட்காருமாறு கூறினார்.
ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். 
இதனால் பொறுமை இழந்த சித்தராமையா, அந்தப் பெண்ணின் கையிலிருந்த ‘மைக்’கை பறித்தார். 
அப்போது அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையாவின் கையோடு வந்துவிட்டது. 
இந்த காணொளி சமூக ஊடகங்களில் அதிவேகத்தில் பரவியதால் சித்தராமையாவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை பெண் எம்பிக்கள் ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன். படம்: இந்திய ஊடகம்

19 Jun 2019

தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்