‘மறுபிறப்பில் வியட்நாமியராக பிறக்க வேண்டும்’

புதுடெல்லி: மறுபிறப்பு என்பது இருந்தால் வியட்நாமியராக பிறக்க வேண்டும் என்று காலஞ்சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு காலத்தில் தெரிவித்திருந்தார்.
அவருக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து புதுடெல்லியில் 88வது வயதில் நேற்று அவர் மரணம் அடைந்தார். 
பெங்களூருவில் 15 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப் போதைய பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் ராணுவ அமைச் சராக பொறுப்பு வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், வியட்நாமியர்கள் ஒழுக்கமானவர்கள், கடப்பாடு மிக்கவர்கள், உறுதியோடு இருப்ப வர்கள் என்று வருணித்தார்.
உலகின் காப்பி சந்தையில் வியட்நாம் முக்கிய இடம் வகிப் பதை சுட்டிக்காட்டிய அவர், “தென் கிழக்கு ஆசியாவில் வியட்நாமின் வளர்ச்சியைக் கண்டு வியக் கிறேன்,” என்றார்.
அடுத்த பிறப்பு என்று ஒன்று இருந்தால் வியட்நாமியராக நான் பிறக்க விரும்புகிறேன் என்று மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் சொன்னார். 
கடந்த 1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமை யிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அவர் ராணுவ அமைச் சர் உட்பட பல அமைச்சர் பொறுப்பு களை வகித்துள்ளார். 
அரசியல்வாதி, பத்திரிகையாளர் என பலமுகங்களைக் கொண்டவர்.
சமதா கட்சியைத் தோற்றுவித்த இவர் ஜனதா தளத்தின் உறுப்பின ராகவும் இருந்துள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக அவர் எதிர்த்தார்.
இதற்கிடையே மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங் கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
“ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக் கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்,” என்று அவர் புகழாரம் சூட்டியுள் ளார்.
இதே போல காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவரது மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
வாஜ்பாய் காலகட்டத்தில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது அதை முன்னின்று நடத்தி வெற்றிக்கு அவர் வழி வகுத்தார். முன்னாள் அதிபர் அப்துல் கலாம் துணையுடன் பொக்ரானில் அணுகுண்டு சோத னையை நடத்திய ஜார்ஜ் பெர் னாண்டஸ் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.