மத்திய பிரதேசம்: சாலை விபத்தில் உறவினர்கள் 12 பேர் பலி

உஜ்ஜையினி: மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 குழந்தைகள் 5 பெண்கள் உட்பட 
12 பேர் உயிரிழந்தனர்.
உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 
13 பேர் நக்டா என்ற இடத்தில் நடந்த திருமண நிகழ்ச் சிக்குச் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். 
இந்நிலையில் ராம்கர் பன்ட்டா என்ற இடத்தில் இவர்களின் வேன், எதிரே வந்துகொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதியது. 
இதில் வேன் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு, முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். 
ஒருவர் படுகாயம் அடைந்தார். இவர் அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
காரில் வந்தவர்கள் அதிலிருந்த ‘ஏர்பேக்’ காரணமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.2019-01-31 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்