அசாம் குண்டுவெடிப்பு வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

கவுகாத்தி: அசாம்  மாநிலத் தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கை கவன், பார்பேட்டா ஆகிய பகுதி களில் கடந்த 30.10.2008ல் தொடர்ந்து 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச் சம்பவத்தில் 88 பேர் உயிரிழந் தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர் பாக பலர்மீது குற்றம்சாட்டப்பட் டது. இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. போடோலாந்து தேசிய ஜன நாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.