ஆதிவாசி சிறுமி பாலியல் வன்கொடுமை: காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் காங் கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஓம் ஜார்ஜ் வீட்டில் ஆதிவாசி தம்பதியினர் பணியாற்றி வந்துள்ளனர். வீட்டு வேலை செய்து வந்த அவர்களுக்கு, அவர்களுடைய 17 வயது மகளும் அவ்வப்போது சென்று உதவி செய்து வந் துள்ளார். அப்போது சிறுமியை ஜார்ஜ் பாலியல் வன் கொடுமை செய்துள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை ஜார்ஜ் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். அப்போது அவருடைய பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர். சிறுமி கடந்த வாரம் தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார்.