இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

இந்தியாவில் பொதுத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலை யில் அந்நாட்டை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு இந்து தேசியவாதக் கொள் கைகளை வலிந்து திணிக்கும் பட்சத்தில் இனக் கலவரம் வெடிக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித் துள்ளது. பிரதமராக நரேந்திர மோடியின் முதல் தவணைக் காலத்தில் பாஜகவின் கொள்கை முடிவுகள், அக்கட்சி ஆளும் சில மாநிலங் களில் சமூக ரீதியிலான பதற்றங் களை அதிகரித்துள்ளன என்றும் இந்து தேசியவாத மாநிலத் தலை வர்கள், தங்களின் ஆதரவாளர்கள் மூலமாக சிறிய அளவிலான கலவரங்களைத் தூண்டிவிட இந்து தேசிய பிரசாரத்தை ஓர் ஆயுதமாகக் கருதக்கூடும் என்றும் அது கூறுகிறது.

2019ஆம் ஆண்டில் உலகளா விய அச்சுறுத்தல்கள் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு மதிப்பீட்டு அறிக்கையை அமெ ரிக்க உளவு, புலனாய்வு அமைப் புகள் செனட் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்தன. அந்த மதீப்பீட்டு அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன. அப்படி ஒருவேளை இந்தியா வில் இனக் கலவரங்கள் அதி கரிக்கும் பட்சத்தில் இந்திய முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப் பட்டு, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் அந்நாட்டில் தங்க ளது கிளைகளைப் பரப்பி வேரூன்ற வழிவகை செய்துவிடும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.