5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த வேலைவாய்ப்பின்மை

புதுடெல்லி: கடந்த 45 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு 2017-18 நிதியாண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் உயர்வு கண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2017-18 நிதியாண்டில் இந்தி யாவின் வேலையின்மை விகிதம் 6.1 விழுக்காடாக அதிகரித்தது என்று தேசிய மாதிரிக் கணக் கெடுப்பு அலுவலகத்தின் மதிப் பீட்டு முடிவுகள் தெரிவிப்பதாக ‘பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரை இந்த மதிப்பீட்டாய்வு நடத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த இந்தத் தரவுகளை வெளி யிட அரசாங்கம் தாமதித்ததே தேசிய புள்ளியியல் ஆணையத்தின் இடைக்காலத் தலைவர் பி.சி. மோகனனும் உறுப்பினர் ஜே.வி. மீனாட்சியும் அண்மையில் தங்க ளது பதவிகளைத் துறக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரம் கடந்த டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப் பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் அதை வெளியிடவிடா மல் சில அரசாங்க அமைப்புகள்  தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
வேலையின்மை விகிதம் நகர்ப் புறங்களில் 7.8 விழுக்காடாகவும் கிராமப்புறங்களில் 5.3 விழுக்காடா கவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
2016 நவம்பர் மாதம் அறிவிக் கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவ டிக்கைக்குப் பிறகு வெளியான முதல் வேலைவாய்ப்பு அறிக்கை என்பதால் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருளியல் ஆண்டு தோறும் 7% வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனாலும், ஒவ்வோர் ஆண்டும் மில்லியன்கணக்கான இளையர்கள் வேலைச் சந்தையில் நுழையும் நிலையில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, ‘இந்தியப் பொரு ளியல் கண்காணிப்பு மையம்’ எனும் தன்னிச்சையான ஆய்வுக் குழு கடந்த ஆண்டில் இந்தியா 1.1 கோடி மில்லியன் வேலை வாய்ப்புகளை இழந்ததாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையிலும் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையிலும் வெளியாகியுள்ள இந்தத் தகவல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்குத் தேர்தலில் பின்ன டைவை ஏற்படுத்தக்கூடும்.