அமெரிக்காவில் 600 இந்திய மாணவர்கள் கைதாகக்கூடும்

நியூயார்க்: குடிநுழைவு விதிகளை மீறியதாக அமெரிக்கா 600 இந்திய மாணவர்களைத் தடுத்து வைத்துள்ளது. அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
மாணவர்களுக்கான விசாவில்  அமெரிக்கா செல்வோர் அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்களின் கல்வி சார்ந்த தொழில் துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது. 
இந்த நிலையில் ஃபர்மிங்டன் என்ற பெயரில் போலியாக பல் கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600க்கும் மேற்பட்டோர் பயில்வது போல் மோசடி செய்து அவர்களுக்கு விசாவும், வேலை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மோசடியில் ஈடுபட்ட இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் எனச் சொல்லப்படும் எண்மரை அமெ ரிக்க போலிஸ் கைது செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களின் துணையுடன் அங்கு சென்ற 600 இந்தியர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.