தமிழில் பேசிய வடமாநில முதல்வர்

சண்டிகர்: அரியானா அரசு சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவின்போது அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், தமிழில் பேசி, வாழ்த்துக் கூறிய காணொளி தீயாகப் பரவி வருகிறது. ‘உழுதுண்டு வாழ்வாரே’ எனும் திருக்குறளைச் சொன்ன அவர், நாற்பது ஆண்டுகளுக்குமுன் தாம் தமிழ் கற்றதாகவும் குறிப்பிட்டார்.