மாயாவதிக்குக் குறி; ஆறு இடங்களில் அதிரடி சோதனை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநி லத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலை வருமான மாயாவதி சம்பந்தப்பட்ட ஆறு இடங்களில் அமலாக்கப் பிரிவு நேற்று அதிரடி சோதனை களை மேற்கொண்டது.
மாயாவதியின் ஆட்சிக்காலத் தில் நினைவகங்கள் அமைப்பதில் ரூ.1,400 கோடி அளவிற்கு முறை கேடு நடைபெற்றதாகக் குற்றச் சாட்டு எழுந்தது. நொய்டாவில் 84 ஏக்கர் பரப்பளவில் ரூ.685 கோடி செலவில் தலித் நினைவகம் கட்டப்பட்டது. அம்பேத்கர், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்‌ஷிராம் ஆகியோருடன் மாயாவதிக்கும் அங்கு சிலை வைக்கப்பட்டது.
அதோடு நில்லாது, பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானைக்கும் பல்வேறு இடங்களில் சிலை வைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஆறு இடங் களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.
 

Loading...
Load next