கண்காட்சியில் தீ விபத்து; நூறு கடைகள் எரிந்து நாசம்

கண்காட்சியில் தீ விபத்து; நூறு கடைகள் எரிந்து நாசம்

1 mins read

ஹைதராபாத் நகரில் அனைத்திந்திய தொழில், வர்த்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு எரிவாயு உருளை ஒன்று வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு வீரர்கள் ஏழு தீயணைப்பு வாகனங்களில் வந்து கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். கடைகளில் தீப்பற்றியதைக் கண்டு மக்கள் அலறி ஓடியபோது, நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மொத்தம் ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தமது கடையில் இருந்த ஏராளமான துணிமணிகள் தீக்கிரையான நிலையில், கலங்கிய மனத்துடன் எஞ்சியவற்றைச் சேகரிக்கிறார் திருவாட்டி உஷா. படம்: ஏஎஃப்பி