விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்; இரண்டு விமானிகளும் பலி

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்தின் விமான தளத்தில் நேற்று காலை இந்திய நேரப்படி 10 மணியளவில் இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் ஒன்று விபத்துக் குள்ளானது. அந்த விமானத்தில் சித்தார்த் நேகி, சமீர் அப்ரால் ஆகிய இரண்டு விமானிகள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 
விமானி சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். விமானி சமீர் அப்ரால் ராணுவ மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இருவ ரும் போர் விமானங்களை இயக் குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 
விபத்துக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 1985ஆம் ஆண்டில் இந்திய ராணுவச் சேவையில் இணைந்த மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பிரான்சில் செய்யப்பட்டவை. அவற்றை  மேம்படுத்தும் பணி யில் ராணுவம் தற்போது ஈடு பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  போர், பயிற்சிகளுக்கான விமா னங்களை உருவாக்குவது, மேம் படுத்துவது ஆகிய பணிகளில் எச்ஏஎல் ஈடுபட்டு வருகிறது.