குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை நால்வரை கடித்துக் குதறியது

தன்னை வேடிக்கை பார்க்க எட்டிப் பார்த்தவர்களையெல்லாம் ஓடஓட விரட்டிய சிறுத்தை, வலைவிரித்துப் பிடிக்க முயற்சி செய்த ஒருவரை அவர் இருந்த ஏணியோடு சேர்த்துத் தள்ளியதுடன் பலரைத் தாக்கியது. 
இமாச்சலப் பிரதேச மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வனப் பகுதி வழியாக ஜலந்தருக்குள் புகுந்திருக்கலாம் என்று அதிகாரி கள் குறிப்பிட்டனர். தன்னந்தனி யாகச் சுற்றித் திரிந்த அந்தச் சிறுத்தை ஜலந்தரின் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பஞ்சாப் மாநில வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சிறுத்தையை முத லில் வலைவீசிப் பிடிக்க முயற்சி செய்தனர். சிறுத்தையைப் பிடிப் பதை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் அதனிடமே சிக்கிக் கடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திறந்தவெளி ஒன்றில் இருந்த சிறுத்தையைத் துரத்தும் நோக்கில் கல்லெறிந்தவர்களை நோக்கி அது பாய்ந்தது. பதறிப்போன பார்வையாளர்கள் நாலாபுறங்களி லும் தெறித்து ஓடினர். அதில் ஒருவரை இழுத்து தரையில் தள்ளிவிட்ட சிறுத்தை அவரது கையைப் பதம் பார்த்தது. அருகில் இருந்த சுவர் ஒன்றில் ஏறுவதற்கு முன்பாக மற்றொருவரையும் கீழே தள்ளியது. 
சுமார் 800,000 பேர் வசிக்கும் நகருக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க சில சாலைகளில் போலி சார் போக்குவரத்தை நிறுத்திவைத் தனர். ஒரு வீட்டுக்குள் புகுந்த அச்சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து  செலுத்திய அதி காரிகள், அதனை சாட்பிர் விலங் கியல் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர். மீண்டும் வனப்பகுதிக் குள் விடப்படுவதற்கு முன்பாக அது பல நாட்களுக்குக் கண் காணிக்கப்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். சிறுத்தையிடம் கடிபட்டவர்கள் சிறிய காயங்க ளுடன் தப்பியதாகக் கூறப்பட்டது.