மோடிக்கு பெரும் சவாலாக விளங்கும் மூன்று பெண்மணிகள்

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி. இவர் கள் மூவரும்தான் இப்போதைக்கு இந்தியப் பெண் அரசியல்வாதி களில் செல்வாக்குமிக்கவர்கள்.
இம்மூவரும் விரைவில் நடக்க இருக்கும் இந்தியப் பொதுத் தேர் தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரிய பிரச்சினையாகத் திகழலாம் என அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாயலில் இருக்கும் அவரின் பேத்தி பிரியங்கா, அண் மையில்தான் தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்தார். இருந் தாலும் அவரது வருகை காங் கிரஸ் கட்சியினருக்குப் புதுத் தெம்பை அளித்துள்ளதாகக் கூறப் படுகிறது. முன்னாள் அரசாங்க உயரதிகாரிகள் உட்பட பலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியால் கூட்ட முடியாத கூட்டத்தை பிரியங்கா வால் திரட்ட முடியும் எனப் பலரும் நம்புகின்றனர்.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியைப் போலவே மாயாவதியும் மம்தாவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின் றனர்.
காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகி 1997ல் திரிணாமூல் கட்சியைத் தொடங்கிய மம்தா 15 ஆண்டுகளுக்குள்ளாக மேற்கு வங்கத்தை பல்லாண்டு காலமாக ஆண்டு வந்த கம்யூனிஸ்ட் கட் சியை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றினார். அதேபோல, தாழ்த் தப்பட்ட, சிறுபான்மையின மக்க ளின் பிரதிநிதியாக விளங்கி வருகிறார் மாயாவதி.
ஆகையால், பிரியங்கா, மம்தா, மாயாவதி ஆகிய மூவரும் சமுதா யத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து வந்தபோதும் அவர்களால் பலதரப்பட்ட வாக்காளர்களையும் கவர முடியும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பாஜகவும் பெண்களைப் புறக்கணிப்பதாகச் சொல்லிவிட முடியாது. மொத்தம் உள்ள 26 மத்திய அமைச்சர்களில் அறுவர் பெண்கள். பெண் சிசுக் கொலை தடுப்பு, கழிவறை கட்டித் தருதல், ஏழைகளுக்கு மானிய விலையில் எரிவாயு உருளை என மோடியும் பெண்களைக் கவரும் பல திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறார்.
அதனால், எதிர்க்கட்சிகள் கருத்தொருமித்து ஓரணியாகத் திரளாத வரைக்கும் அவர்களால் மோடியை வீழ்த்துவது சிரமம்தான் என்றும் சொல்லப்படுகிறது.