129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது

குடிநுழைவு விதிகளை மீறியதாக இந்திய மாணவர்கள் 129 பேரை அமெரிக்கா கைது செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் இந்தியா ஆட்சேபணைக் குறிப்பை வழங்கியுள்ளது. கைதான மாண வர்களைத் தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயில் வதற்காக முறையாக விசா பெற்றுச் செல்லும் மாணவர்கள், படிப்பை முடித்தபிறகு அங்கேயே வேலை செய்வதற்காக பணி விசா விற்காகக் காத்திருப்பது வழக்கம். 
இடைப்பட்ட காலத்தில் அமெ ரிக்காவிலேயே தொடர்ந்து தங்கி இருப்பதற்காக பல்கலைக்கழகங் களில் வேறு படிப்புகளுக்குப் பதிவுசெய்துகொள்வதும் உண்டு. அந்த வகையில், டெட்ராய்ட்டில் உள்ள ஃபார்மிங்டன் பல்கலைக்கழ கத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டனர்.
ஆனால், குடிநுழைவு விதி களை மீறியோரையும் விசா மோச டியில் ஈடுபடுவோரையும் கண்டு பிடிப்பதற்காக அமெரிக்க உள் நாட்டுப் பாதுகாப்புத் துறை போலி யாக இந்தப் பல்கலைக்கழகத்தை அமைத்து இருந்தது.
இதை அறியாமல், விசா மோச டியில் ஈடுபட்டதாக இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் எனக் கூறப்படும் எண்மர் அண் மையில் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 600 மாணவர்களை அமெரிக்காவிலேயே தங்க வைக் கும் நோக்கில் அவர்கள் மோசடி யில் ஈடுபட்டதாகச் சொல்லப்படு கிறது. இதன் தொடர்ச்சியாகவே இப்போது 129 இந்தியர்கள் உட்பட 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.