அவையை புறக்கணித்த தம்பிதுரையால் சலசலப்பு 

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் நேற்று முன்தினம் இடைக்கால நிதிநிலை அறிக் கையைத் தாக்கல் செய்தபோது மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை (படம்) அறையில் இல் லாதது அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 
நிதிநிலை அறிக்கை மீதான உரையை புறக்கணித்ததன் மூலம், பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை மறைமுகமாக அவர் பதிவு செய்தி ருப்பதாகக் கருதப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்மைக்காலமாக மத்திய அரசை அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார் தம்பிதுரை. 
குறிப்பாக உயர்சாதியினருக் கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால நிதிநிலை அறிக் கையைத் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. 
ஆனால் அதிமுக மூத்த தலை வர்களில் ஒருவரான தம்பிதுரை, அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது அவைக்கு வராமல் புறக் கணித்துள்ளார்.  ஏற்கெனவே அதிமுகவைச் சேர்ந்த இவரும், சில முக்கிய தலைவர்களும் பாஜக உடனான கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக அண்மையில் தகவல் வெளியானது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்