புலி தாக்கி பெண் உயிரிழப்பு

ரத்தன்பூர்: ராஜஸ்தானில் வனப்பகுதிக்குள் சென்ற பெண்ணைப் புலி தாக்கிக்கொன்றது. ரத்தன்பூர் தேசியப் பூங்கா அருகில் உள்ள குந்தேரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் முன்னி தேவி. இவர் தேசியப்பூங்காவுக்குள் சென்று கொண்டிருந்த போது புலி முன்னியைத் தாக்கிக் கொன்றது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முன்னிதேவியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கேட்டு அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.