மாணவர்களுக்கு ராகுல் திடீர் விருந்து

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பில்  வெற்றிக் கனியைப் பறிக்க ஆர்வம் காட்டிவருகிறது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக டெல்லியில் உள்ள சீன உணவகத்தில் மாணவர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களுடன் உணவு சாப்பிட்டார். நாடு முழுவதும் இருந்து 7 மாணவர்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர். அப்போது மக்களின் நலனுக்காக சில ஆலோசனைகளை மாணவர்கள் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தனர். அத்தகைய யோசனை களில் சில காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.