கர்நாடகா தேர்தல் பிரசாரத்திலும் களமிறங்கவுள்ள பிரியங்கா காந்தி

புதுடெல்லி: 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி வத்ரா கர்நாடக மாநிலத்திலும் பிரசாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர் தலின்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமின்றி கர் நாடகா மாநிலத்திலும் காங் கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பிரியங்கா காந்தி அயராது பாடுபடுவார் என்றும் இவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாஜகவும் தகுந்த நபர் களைத் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியின் பொதுத் தேர்தல் பிரசாரம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரை வில் வெளியிடப்படும் என்று மாநில பிரசாரக் குழுத் தலைவர் ஹெச் கே பாட்டீல் கூறினார்.
"எங்களின் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் பிரசாரம் செய்வார். நாங்கள் பிரி யங்காவையும் வரவேற்கிறோம்," என்று திரு பட்டீல் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

"கடந்த 1999ஆம் ஆண்டு பெல்லாரி தொகுதியில் பிரியங்கா முதன்முதலில் பிரசாரம் செய்த தையும் மேற்கோள்காட்டி பேசிய பட்டீல், எனவே பிரியங்கா கர்நாட காவில் பிரசாரம் செய்வது விரைவில் முடிவு செய்யப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் குறித்து தரக்குறைவான கருத்து களைச் சில பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அழகாய் இருப்பதைத் தவிர வேறு எந்தத் தகுதியும் பிரியங்காவுக்கு இல்லை என்று அவர்கள் கூறி யுள்ளது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இதுதொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன். மாநிலங் களின் தலைநகரில் உள்ள காவல் நிலையத்திலும் இதுதொடர்பாக இன்று 4ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து மாநில காங்கிரஸ் மகளிரணி தலைவர்களையும் கேட்டுக்கொள் கிறேன்," என்று காங்கிரஸ் தேசிய மகளிரணி தலைவர் சுஷ்மிதா தேவ் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!