‌ஷீலா தீட்சித்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி

‌ஷீலா தீட்சித்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி

1 mins read

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிடும் என்று டெல்லி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ‌ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். ‌ஷீலா தீட்சித் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகை யில், "ஆம் ஆத்மியுடன் கூட் டணி அமைப்பதற்கு சாத்திய மில்லை. அது முடிந்துபோன விஷயம். டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிட உள்ளோம். இதையொட்டி வேட் பாளர்கள் தேர்வும் தொடங்கி யுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப் படுவர். புதிய, பழைய முகங் களுக்கும் முன்னாள் எம்எல்ஏக் களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். கூட்டணி இல்லாததால் காங் கிரஸ் எதிர்நோக்கும் சில சாதக-பாதகங்களைக் கவனத் தில் கொண்டு தேர்தல் பணியாற்றுவோம். "டெல்லியில் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆம் ஆத்மி, தங்களது நிர்வா கம் சிறப்பாக உள்ளதாகக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தி வருகிறது. ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு மக் கள் தக்க பதிலடி கொடுப்பர்," என்றார் ‌ஷீலா தீட்சித்.