வைரங்களுக்காக 1,000 கிலோ நந்தி கொள்ளை; கும்பல் கைது 

ராஜமகேந்திரவரம்: ஆந்திரப்பிர தேசத்தில் உள்ள கோயில்  நந்தி ஒன்றின் வயிற்றில் விலைமதிப்பு மிக்க வைரங்கள் குவித்து வைத் திருப்பதாக நம்பி, 1,000 கிலோ நந்திச் சிலையை ஏராளமானோர் ஒன்றாகச் சேர்ந்து கொள்ளை அடித்துச் சென்றனர்.  இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு 15 பேர் கொண்ட கும்பலைப் போலிசார் நேற்று கைது செய்தனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்  உள்ள 1,000 கிலோ எடை கொண்ட கிரானைட் நந்தி சிலைக்குள் கோடிக்கணக்கிலான வைர நகைகள் ஒளித்து வைக்கப் பட்டிருப்பதாக வதந்தி பரவியது.இதை உண்மையென்று நம்பிய  திருடர்கள் 400 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் இருந்து நந்திக் கடவுள் சிலையை கடத்திச் செல்ல திட்டம் வகுத்து, அதன்படி காய் நகர்த்தி திருட்டை அரங்கேற்றினர். 

இந்த நந்தி சிலை ராமச்சந் திராபுரம் நகரில் உள்ள அகஸ் தீஸ்வரா சுவாமி ஆலயத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி திருடப்பட்டது.  

“1,000 கிலோ எடைகொண்ட நந்தி சிலையை குற்றவாளிகள் கும்பலாகச் சேர்ந்து நீரோடை கரையோரப் பகுதிக்குச் திருடிச் சென்றுள்ளனர். 
“அங்கு இந்தச் சிலையை வைத்து, அதை நவீன கருவிகளால் வெட்டி, உடைத்து உள்ளே தேடி யுள்ளனர்.  ஆனால் அதனுள் விலை மதிப்பு மிக்க பொன்னோ, பொருளோ, கற்களோ எதுவுமே இல்லை. “ஏமாற்றமடைந்த திருடர்கள் நந்திச் சிலையை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். 
“நாங்கள் ஒரு குழுவாக இணைந்து விசாரணைக் குழுவை அமைத்தோம். உள்ளூர் மக்களிடம் விசாரணை செய்து, தகவல் சேகரித்து அதில் கிடைத்த யூகங்களின் அடிப்படையில்  15 பேரைக் கைது செய்துள்ளோம்,” என்று போலிஸ் அதிகாரி சிவ கணேஷ் கூறினார். 

“கோயில் அதிகாரிகள் அளித்த புகாரின் தொடர்பில் 15 பேரைக்  கைது செய்துள்ளோம்.  
“இந்தத் திருட்டுச் சம்பவத்தில் இவர்களுடன் இன்னும் பலர் சேர்ந்துகொண்டிருக்கலாம் என கோயில் அதிகாரிகள் கூறியுள்ள னர். இதுபற்றி மேலும் விசாரணை தொடர்கிறது,” என்று சிவ கணேஷ் மேலும் கூறினார். 

ஆலயத்தில் எந்த ஒரு தொலைக்காட்சியோ புகைப்பட கண்காணிப்பு கருவியோ இல்லை எனறும் கூறப்பட்டுள்ளது. 
இந்த திருட்டு சம்பவம் பக்தர் களிடம் பெரும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தி உள்ளது. 

Loading...
Load next