தம்பிதுரையைப் புகழ்ந்த கனிமொழி

சென்னை: மக்களவை துணைசபா நாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை அண்மைக் காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும் மோடி தலைமையிலான மத்திய அரசையும் எதிர்த்து கருத்து தொவித்து வருகிறார். தான் கலந்துகொள்ளும் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் மத்திய அரசை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை திமுக மகளிரணி தலைவியும் எம்பியுமான கனிமொழி (படம்) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது அவரிடம் தம்பிதுரை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், தவறான கட்சியில் சரியான மனிதரான வாஜ்பாய் இருப்பதாக தலைவர் கருணா நிதி தொவித்திருந்தார். அதேபோன்று தமிழகத்தில் அதிமுகவில் தம்பிதுரை இருப்பதாகத் தொவித்தார்.