கனகதுர்கா வீடு திரும்பினார்; மாமியார் வெளியேறினார் 

திருவனந்தபுரம்: நீதிமன்றத் தீர்ப் பின்படி இறுதியில் கேரளா, மலப் புரத்தில் உள்ள மாமியார் வீட்டிற் குள் நுழைந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதாகக் கூறியுள்ளார் கனகதுர்கா. முன்னதாக சபரிமலைக்குச் சென்ற  காணொளியை  வெளியிட்டதை அடுத்து மாமியாரால் அடித்து விரட்டப்பட்ட கனகதுர்கா, 39, நீதிமன்ற அனுமதியுடன் நேற்று வீடு திரும்பினார்.

காவல்துறை பாதுகாப்பில் அரசு விடுதியில் தங்கவைக்கப் பட்டிருந்த கனகதுர்காவுக்குத் தமது வீட்டுக்குச் செல்ல உரிமை உள்ளதாக மலப்புரம் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.  இதைத் தொடர்ந்து வீடு திரும் பிய கனகதுர்கா, தமது கணவர் வீட்டாருடன் சேர்ந்துவாழ தமக்கு எந்த தயக்கமும் இல்லை என்ற போதிலும், அவர்கள் தமது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக    வும் அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

தமது குழந்தைகள் தற்போது தம்முடன் இல்லாவிட்டாலும் விரைவில் அவர்களுடன் சேர்ந்து வாழ்வேன் எனவும் அவர் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோயி லுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என  உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை யடுத்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களும் அய்யப்பன் சன்னிதானத்துக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். 

இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கனகதுர்காவால் அவரது வீட்டுக்கு செல்ல முடியவில்லை.பதற்றம் தணிந்து தனது வீட் டுக்குச் சென்ற கனகதுர்காவை அவருடைய மாமியாரும் கணவரும் வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். அதுமட்டுமன்றி கோயிலுக்குள் நுழைந்து பாவம் செய்துவிட்டாய். எனவே பகிரங்கமாக பொது இடத்தில் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிப்போம் என்று அடித்துத் தாக்கினர். அதில் காயமடைந்த கனகதுர்கா மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டபோது அவ ருடைய மாமியாரும் தாமும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத் துவமனையில் சேர்ந்தார்.
இதன்தொடர்பாக வீட்டுக்குள் நுழைவதற்கு உரிமை கோரி நீதி மன்றத்தில் கனகதுர்கா வழக்குத் தொடர்ந்தார். 
 

Loading...
Load next