செல்ஃபி மரணத்தை தடுக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: சுற்றுலாத்தலங் களில் ‘செல்பி’ எடுப்பதால் ஏற் படும் விபத்துகளைத் தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப் பித்துள்ளது.
நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கைத்தொலை பேசியில் ‘செல்பி’ புகைப்படம் எடுத்து வருகின்றனர். 
உலக மக்களில் பெரும் பாலானோர் கைபேசி வலைக்குள் கட்டுண்டு கிடக்கின்றனர். தகவல்கள், காணொளிகள், புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது அவர்களின் வழக்க மாகி வருகிறது. பிறந்தநாள் விழா, சமயவிழாக்கள், மண விழாக்கள் மட்டுமின்றி சுற்றுப் பயணத்தின் போதும் புகைப் படங்களை எடுத்து  ரசிப்பது மக் களின் சுபாவமாகிது. 
இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், இவற்றைத் தடுக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள் துறை இணை அமைச்சர் ஹன்ஸ் ராஜ் அகிர் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கூறியபோது, சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ எடுக்கும்போது ஏற்படும் விபத்து களைத் தடுத்துச் சுற்றுலா பயணிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுற்றுலா அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
‘செல்பி’ விபத்து ஏற்படும் பகுதிகளை முதலில் அடையாளம் கண்டறிந்து அந்த இடங்களில் ‘செல்பி’ எடுக்க ‘தடை விதிக்கப் பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அந்த இடங்களுக்குச் சுற்றுலா பய ணிகள் யாரும் செல்லாத வகை யில் தடுப்புகளை அமைக்க வேண்டும். இவையெல்லாம் மாநில, யூனியன் பிரதேச அரசு களின் முக்கிய பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
2019-02-07 00:01:00 +0800

Loading...
Load next