இந்திய நாடாளுமன்றத்தில் வாஜ்பாயின் உருவப்படம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படம்  இந்திய நாடாளுமன்றத்தில் வரும் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது. 

இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த திரு  வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி 93 வயதில் காலமானார். அவரது உருவப்படத்தை திறப்பதற்கான முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்று இந்த முடிவுக்கு இணங்கினர். 

திரு வாஜ்பாயின் உருவப்படம் இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தால் திறக்கப்படும். நாடாளுமன்ற வளாகத்திற்கு நடுவில் இருக்கும் மண்டபத்தில் இந்தியாவின் முன்னைய பிரதமர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன. திரு வாஜ்பாயின் நினைவில் 100 ரூபாய் நாணயம் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப்

17 Jun 2019

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்