மருத்துவமனையில் தீ விபத்து

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நெய்டா நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தீச்சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையில் சிக்கியிருந்த நோயாளிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்தன.

அந்நேரத்தில் மருத்துவமனைக் கட்டடத்தில் சிக்கிய நோயாளிகள் குழப்பத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருந்தபோதும் தீயணைப்பாளர்கள் ஒருவழியாக அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

தீச்சம்பவத்திற்கான காரணம் தற்போதைக்கு உறுதி செய்யப்படவில்லை.