நொய்டா மருத்துவமனையில் திடீர் தீ; நோயாளிகள் சன்னல் வழியாக மீட்பு

நொய்டா: உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள பல அடுக்குமாடி கட்டடத்தில் இயங்கி வரும் மெட்ரோ மருத்துவமனை மற்றும் இதய நல சிகிச்சை நிலை யத்தில்  நேற்று தீ விபத்து ஏற் பட்டது. நொய்டாவின் செக்டார் 12ல் இந்த கட்டடம் உள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு 35 நோயாளிகளை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
தீ விபத்து காரணமாக தொடர்ந்து கட்டடத்தில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. 
கட்டடத்தின் வராண்டா,  மாடங்களில் நின்றிருந்த மக்களை மீட்பதற்காக கண்ணாடி சன்னல்களை உடைத்துக் கொண்டு மீட்புப் பணியாளர்கள் சென்றனர்.
இந்தச் சம்பவத்தில் காய மடைந்தோர், பிற விவரங்கள் பற்றி உடனடியாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக் குள் கொண்டு வந்துள்ளனர்.
அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் முழு விவரம் வெளியிடப்படவில்லை.

Loading...
Load next