பிரியங்கா கணவரிடம் மீண்டும் விசாரணை

புதுடெல்லி: சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையினர் முன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவரு மான ராபர்ட் வதேரா நேற்று முன் தினம் முன்னிலையானார். 
அப்போது அவர் ஐந்து மணி நேரத்துக்கு மேல் விசாரிக்கப் பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு ராபர்ட் வதேரா மீண்டும் அமலாக்கத்துறை அலு வலகத்தில் முன்னிலையானார்.
சொத்துச் சந்தை நிறுவனங் களை நடத்திவரும் ராபர்ட் வதேரா, இங்கிலாந்தில் ஏராளமான சொத்துகளை முறைகேடாக வாங் கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. 
இதில் லண்டனின் பிரன்யன் சதுக்கத்தில் வதேராவுக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் 1.9 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.17 கோடி) மதிப்புடைய சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்திருப் பதாக அமலாக்கத்துறை அதி காரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறியுள்ள வதேரா, அர சியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாம் பழிவாங்கப்படுவதாகக் கூறி யுள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்பிணை கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், வதேராவைக் கைது செய்ய 16ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இம்மாதம் 6ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு முன்னிலை யாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று முன் தினம் டெல்லி ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத்துறை அலுவல கத்தில் ராபர்ட் வதேரா முன்னிலை யானார்.  ஏறத்தாழ 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
டெல்லியில் ராபர்ட் வதேரா, அமலாக்கத் துறை அலுவலகத் துக்கு காரில் வந்தபோது அவ ருடன் பிரியங்காவும் இருந்தார்.
ராபர்ட் வதேராவை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இறக்கிய பிரியங்கா, பின் காரில் ஏறி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்குச்  சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்கு வட்டாரத்துக்கான அகில இந்திய பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரியங்கா பதில் அளித்தார்.
“ராபர்ட் வதேரா எனது கணவர். அவர்தான் எனது குடும்பம். எனது குடும்பத்தை நான் ஆதரிக்கிறேன். எனது கணவர்  மீதான வழக்குகள்  எதற்காக நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்,” என்றார்.
இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா, “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுப்பதற்காக வே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்