கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

புதுடெல்லி: வட இந்தியாவில் குறைந்தது 28 பேர் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம், உத்தர காண்ட் ஆகிய இரு மாநிலங் களில் நடந்த இருவேறு சம்ப வங்களில் இவர்கள் உயிரிழந் தனர். உத்தரகாண்ட் மாநிலத் தில் 12 பேர் இறந்ததாகவும் குறைந்தது 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலிசார் கூறினர். 
உத்தரப்பிரதேசத்தில் 16 பேர் இறந்துள்ளதாகவும் இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வும் போலிஸ் அதிகாரி வித்யா சாகர் மிஸ்ரா கூறினார். 
இந்தியாவில் குடியால் சராசரியாக 1,000 ஏழை மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழப்ப தாகவும் தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.